இது ஒரு வரலாற்றுப் பதிவு.
நவம்பர் 7இல் ஈஸ்டாம் திரித்துவ மண்டபத்தில் பி.ப.3.00 மணிக்கு ஆரம்பமாகியது.பல வாசகர்களை அசைய வைத்த இந் நிகழ்வின் இரண்டாம் பகுதி மாலை 7.00 மணிக்கு திரு. ஐ.தி.சம்பந்தன் தலைமையில்,'சங்கீதபூஷணம்'ராகினி.ஐயாத்துரை அவர்களின் மாணவியின் கடவுள் வாழ்த்துடன் ஆரம்பமாகியது.'இலக்கியப்பூக்கள்' நூல் அறிமுகத்தில் 'சுதுமலைக்கவிஞர்'இராஜமனோகரன்,''இலக்கியச் செம்மல்'சிவதணிகாசலம்,'இளங்கவிஞர்'கனக.ஈஸ்வரகுமார்,வேலனையூர்.பொன்னன்னா , 'படைப்பாளி'நவாஜோதி யோகரத்தினம் ஆகியோரின் சிறப்புரைகளுடன் செல்வி.பிரேமகுமரின் கவிதைவாசிப்பும் இடம்பெற்றது.ஈழத்து படைப்புலகுக்கு இன்னொரு பதிவை ஏற்படுத்திய இந் நிகழ்வை பலரும் வியந்து பாராட்டினார்கள்.இறுதியாக முல்லைஅமுதனின் ஏற்புரையுடனும்,சுவைமிக்க உணவுடனும் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.வழமை போல சட்டமிடப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது விழாவுக்கு சிறப்பைத் தந்திருந்தது.எனினும் ஒரு நெருடல், முல்லைஅமுதனின் விழாவில் சிலர் வந்து தங்கள் நிகழ்வின் நுழைவுச் சீட்டுக்களை விற்பனை செய்ததை சுட்டிக்கட்டியது விழா அமைப்பாளர்களையும் உணர வைத்திருக்கும்.
அடுத்த முறை கவனம் எடுப்பது நன்று.
வாழ்த்துக்களுடன்,
தர்சனா.
11/11/09.
No comments:
Post a Comment