பாரிஸில் ஐரோப்பிய தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் வளர்ச்சிச்சம்மேளனம் ஆதரவில் வண்ணைதெய்வம் எழுதிய காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக்கலைஞர்கள் நூல் வெளியீட்டுவிழா 29.10.2006 ஞாயிறு பிற்பகல் 5.00 மணியளவில்
1-Pடுயுஊநு ளுயுடுஏயுனுழுசுயுடுடுநுNனுநு – 93170 டீயுபுNழுடுநுவு எனும் முகவரியில்அமைந்துள்ள ளுயுடுடு னுநுளு ஊழுNவுநுசுநுNஊநு மண்டபத்தில் நடைபெற்றது. மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டத்தில் பலகலைஞர்களைக் காணக்கூடியதாக இருந்தது.
புலவர்மணி இளவாலை அமுதுவின் தலைமையில் கலைமாமணி முகத்தார் யேசுரட்னம் நூலாசிரியர் அறிமுகத்தை நிகழ்த்தினார். திரு. சி. காராளபிள்ளை நூல் அறிமுகத்தினையும் பாரிஸ் கம்பன் கழகத் தலைவர் திரு. பாரதிதாசன் வெளியீட்டுரையை நிகழ்தினார்.
மேலும் சிறப்புரைகளாக திரு. பாரிஸ் பார்த்தசாரதி, திரு. அலன் ஆனந்தன், திரு. தயாநிதி, திரு. எஸ்.கே. ராஜன், திரு.சி. பாலச்சந்திரன், திருமதி. தமிழ்ப்பிரியா இளங்கோவன், திரு.ரி. ரவீந்திரன், திரு. மெய்கண்டான் அரியரட்னம், திரு. முல்லைஅமுதன், திரு. எஸ். கே. காசிலிங்கம் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
சிறப்பு நிகழ்ச்சிகளாக கலைஞர்கள், ஊக்குவிப்பாளர், நூல்சேகரிப்பாளர் ஆகியோருக்கு மூத்த கலைஞர்களான திரு. பரா, திரு. அப்புக்குட்டி இராஜகோபால், திரு. பெஞ்சமின் இமானுவல் ஆகியோரால் கௌரவம் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளை பிரியாலயம் துரைஸ், இராகுணபாலன் ஆகியோர் நகைச்சுவையுடன் மிகவும் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள். இந் நிகழ்வினூடாக வண்ணை தெய்வத்திற்கு நிறைய விமர்சனங்கள் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. விரைவில் எல்லோரும் விரும்பும் வகையில் இரண்டாம் பதிப்பு வெளிவரவுள்ளதாகத் தனது ஏற்புரையில் வண்ணை தெய்வம் குறிப்பிட்டார். அத்துடன் தன் செயற்பாட்டிற்கு திரு. சிவானந்தராஜா, அந்தனி ஜீவா ஆகியோர் இலங்கையில் இருந்து மிகவும் உறுதுனையாக இருந்தமையையும் நன்றியுடன் குறிப்பிட்டார். விழா 9.00 மணிக்கு இனிது நிறைவு பெற்றது.
ராகவன் ஈழம்
No comments:
Post a Comment