Saturday 25 January 2014

'உணர்வுப்பூக்கள்'

வேதாவின் கவிதைகள் ஊடாக நம்க்கு பரிச்சயமான வேதா தன் கணவருடன் இணைந்து இந் நூலை தந்துள்ளார். 187 பக்க்ங்களில் கிறவுன் சைசில் செனனை மணிமேகலைப்பிரசுரம் ஊடாக வெளிவந்துள்ள நூலின் அனைத்துக்கவிதைகளும் சம தளத்தில் பயணிக்கின்றன. கோப்பாய்/நாயன்மார்கட்டு இணைவில் சங்கமித்த டென்மார்க்கில் வாழும் கவிதைத்தம்பதிகளின் உண்ர்வுக்ளின் வெளிப்பாடே நமக்கு கிடைத்த கவிமாலை.69/49 கவிதைத் தலைப்புக்களில் இருவரும் அழகு தமிழில் தமிழை லாவகப்படுத்தி நமக்குப் புரியும் வண்ணம் தந்திருப்பது யாவரும் புரியும் இலகுவாக படிக்கக்கூடியதாக உள்ளது. பாராட்டத்தான் வேன்டும். மீனாட்சி நடேசையர் தொடக்கம் இன்றைய வேதா வரை தமிழில் இலகுவாக எழுத முடிந்திருக்கிறது. இங்கு வேதாவுடன் அவரது கணவரானான இலங்காதிலகமும் இணைந்து கவிதை சமைப்பது ஆரோக்கியமாக இருக்கிறது. தேவையும் கூட. வேதவின் கவிதைகளைப் பார்க்க போனால்..., பக்க்திப்போக்கள்,பெற்றோர் பாசப்பூக்கள்,மழலைப்பூக்கள்,மழலைப்பாடல் பூக்கள்,இயற்கைப்பூகள், கதம்பபூக்கள், பெண்மைப்புக்கள்,விண்ணேகியோர்க்கு...,பொது...எனும் தலைப்புக்களில் வேஅதா தரும் கவிதைகளில் ஏற்ற இறக்கமின்றி சமசீர் நடையில் தாளம் பிசகாமல் மனதுக்குள் ஏதோ மெல்லிதான வருடலுடன் கூடிய சில சோகங்களை எதிர்பார்ப்புக்களை சொல்லிச் செல்வதை உணரமுடிகிற்து. கவிதையின் தளம்/களம்புலம்பெயர் சூழலாக இருப்பினும் வேர்களை மறக்காத வலி தாங்கிய தாயின் மனது பற்றி ஏதொ எமக்கு சொல்லிச் செல்கிறது. தற்போதெல்லாம் வாசிக்க முடிகிற வார்த்தைகள் அணைத்தும் நமக்கும் வலிக்கவே செய்கிறது. இது யாவர்க்கும் பொருந்தும். 'நீ அருகில் வாழ்கின்ற நிறைவு என்றும் எனக்கம்மா... உன்னை பிரிந்த நினைவு எனக்கென்றும் இல்லையம்மா... உன்மடி மீது சாய்ந்த மனனிறைவு எனக்கம்மா.. நற்புதையல் கிடைத்ததென நிறைவு கொண்டேனம்மா..'-எனத் தாய் பற்றி சொலகிறார். 'எங்கள் வீட்டு மாமரக்குடை அவர்... குன்றாத ஆதரவுக் குடையில் நாம்.. என்றும் சுடரான அறிவும் அன்பும்.. நின்று இல்லத்திற்கு ஒளி தந்தது... கடற்கரை மணலாய் பல நினைவுகள்.. கலையழகுக் கிழிஞ்சல்களாய் சில நினைவுகள்... கொலுவாக மனதில் அழியாத சொருபம்.. கொடுக்கிறது சுய ஆழுமையை சுயமாக எமக்கும்....' தன் தந்தை பற்றி சொல்கையில் எமக்கும் சொல்ல மறந்த சேதிகள் நிறையவே உண்டு என்பதே சரியானது. 'வேதாவின் கவிதைகள்' நூலில் சொல்லாத சில சங்கதிகளை சுமந்து வந்துள்ளதாகவே நினைக்கிறேன். வாழ்த்துக்கள். பூவரசு,லண்டன் தமிழ் வானொலி,வார்ப்பு.கொம்,பதிவுகள்.கொம், மண்.. என இவ்ரின் கவி வழங்கல்க்ளை சுமந்து வந்தவைகள்.அத்னால் தானோ என்னவோ கவிதைகளை சிறப்பாக எழுதும் பயிற்சியாயிற்று எனலாம். 'தேடிப் பைந்தமிழ் நூல்கள் ஆழப்பயில்வோம்.. கூடிப் பல்லரங்கினில் சங்கத் தமிழினையாய்வோம்.. மோனைத் தமிழ் மோகனமாய் வாழவெங்கும் .. கூனித் தடுமாறாது கூட்டாக முயல்வோம்.. நாவேந்தர் பழ்ந்தமிழையெடுத்து நிமிர்த்துவோம்.. சீரேந்தும் தடைப் பின்னடைவுச் சாய்வைத் தடுப்போம்...'என தமிழ் மீதான உணர்வை வெளிப்படுத்துகிறர்ர். இலங்காதிலகம் அவர்களின் கவிதைகளும் சிறப்பவெ உள்ளன.பூவைப் பார்ப்பதா/நாரின் மணத்தை அனுபவிப்பதா? இருவரின் கவிதைகளும் சீரான தள்த்தில் பயணிக்கின்றன. நாடு பற்றிய சிந்தனைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. 'ஆணையிறவு அன்னியன் கையிலிருந்தது... ஆத்திரம் தமிழன் மனதிலிருந்தது.. வெள்ளி வரை தாக்கம் தீரவில்லை... வென்றெடுத்த வீர வேங்கைக்குத் தீபாராதனை.. போர் மனம் கொண்டவனில்லை தமிழன்..'சராசரித் தமிழனின் வெற்றிப் பெருமிதம் தான்.வீராப்புடன் நெஞ்சை நிமிர்த்தி நடந்த நமக்கு சோகமே எஞ்சியது . 'போர் அனர்த்தம் புகன்றிடமுடியாது... அழுது வடிந்த முகங்கள்.. இழந்து போனவீடுகள்... பல கதைகள் கூறின.. பல நூற்றாண்டு போயினும், பல வடுக்கள் போயினும், பம்பர உலகம் மறந்துவிடும்.. கோவையில் மாவீரர் துயிலும் இல்லம்.. கோடி மனதை கசிய வைக்கும் இல்லம்.. நான் பார்த்த ஈழம் நலமில்லை.. ' ஒரு வரலாறு பதியப்பட்டிருக்கிறது. வேர்களுடன் பேச முடியாத அன்னியம் கிளைகளுடன் பேசத் துடித்து பின் பார்த்தனீயச் செடி நாட்டியகொடுமையையே கண்டோம். எந்தன் மனம்,மலையில் பிறந்த ஆரணங்கே,வழி..வழி..,பூவையே, என்றும் இளமைக்கதல்..,டென்மார்க் தனிமை,இதயம் தேடுது உனை,இடைவெளி சிறிதே,தாகம்,இயக்கம்,முருகா,எதை எதையோ தேடுகிறேன், எங்கள் ஊர் பூவரசு,அடுத்தது என்ன,போதை,அம்மா நீ அங்கு சுகமா,ந்ம்பிக்கை நாறுக்கள்,அன்னியக்காற்று,வானம்,கனவு,ஆணாதிக்கம்,என் அப்பா,பிணம்,பிணப்பெட்டி,பிணக்குழி,வாழ்வுக்காய் வதைபடுகிறோம்-வதைபடுதலில் வாழ்கிறோம், சிறுமியின் கனவு,மல்லிகை மலையில் அலரிப்பூ,யாழ்ப்பாணம், இரவல் தத்தம் இரவல் கொள்ளி,தத்துவமும் தவமும்,இத்தனை முகங்கள?, பொய்த்து விட்டது,வஞ்சகனால் எரிந்தது நூலகம்,இதயமுள்ள இயற்கையே,கோடகாலம்,னான் பார்த்த ஈழம் நலமில்லை,எழு!எழு!,னடை,எனக்குளும் வந்தது வசந்தம்,நாசவேலை,அறிவின் கீழ்நிலையா,னான் யோசிக்கிறேனேன்று'... விரிகிறது இலங்காதிலகத்தின் கவிதைகளின் தலைப்புக்கள். 'பூவரசு பெயர் ஏன் கொண்டாய்? பூக்களுக்கு நீ அரசா? பூவுடன் அரச இலை சாயல் கொண்டதனால், பூவரசு பெயர் பெற்றாயா?' நூலகம் எரிந்த சோகம் இவரையும் தாக்கியதில் வார்த்தை வடிவம் பெறுகிறது. பிற மனங்களை நோகடிக்காதபடி எழுத முனைந்திருக்கிறர்கள். கவிதைகளில் இறுக்கமில்லை. யாவரும் படித்துணர முடிகிறது. குறமகள்,கோகிலா மகேந்திரன்,தம்பிலுவில்.ஜெகாபோன்றோரின்கவி வடிவம் போல் இலகுவாக எழுதும் வேதாவுடன் அவரின் கணவர் இலங்காதிலகமும் மேலும் நல்ல கவிதை நூல்களை தந்து எம்மை வியப்பில் ஆழ்த்த வாழ்த்துவோம். -முலலைஅமுதன் 29/08/2009

No comments:

Post a Comment