Sunday 11 August 2013

அவதார புருஷன் வாலி

இன்று கணினிவலயம் இடியைத் தந்தது. நான் நேசித்த கவைஞனைக் காலன் பறித்துக் கொண்ட துக்க நாள் இன்றாகும்.ரங்கராஜன் என்று அறியப்பட்ட வாலி எழுத்தை ஆத்மார்த்தமாக நேசித்தவர். தானும் நாகேஷும் ஒறெ நோக்கில் திரைப்பயணத்தை ஆரம்பித்ததாக சொன்னது ஞாபகம். மாலியைப் போல் நல்ல ஓவியராக வர விரும்பியிருந்தாலும் திரைக்கவிஞராகாவே நமக்கு தெரிய வந்தார். சக கலைஞனை,கவிஞனை நேசிக்கின்ற பாங்கு அலாதியானது. கவிஞர்.கண்ணதாசன் கூட வாலியின் பாடல்களுக்கும் தன் பாடலுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக உணர்ந்தார். மூத்த தலைமுறையின்ர் மாத்திரமல்ல இளைய தலைமுறை கதா பாத்திரங்களுக்கேற்ப பாடல்களை எழுவதில் அவருக்கு நிகர் அவரே. எம்.ஜி.ஆர்.மீது அளவிடமுடியாத மரியாதை வைத்திருந்தார்.அவரின் கவிவரிகளுக்கு இசைய பாடல் இசையமைத்தவர்களில் விஸ்வநாதன் பொருத்தமானவாராக எனக்குத் தெரிந்தார்.எம்.ஜி.ஆரின் புகழுக்கு முக்கிய பங்கினை வாலியின் பாடல்களும் ஒரு காரணம் எனலாம்.நான் ஆனையிட்டால்..அது நடந்துவிட்டால் என்று பாடல் தொடங்கவே அரங்கு அதிரும்.எம்.ஜி.ஆரை அடையாளப்படுத்தி நின்றது. வாலிப மிடுக்கில் நாம் பயணித்த நாளில் நம்முடன் அவரின் பாடல்களும் பயணித்தன.அந்த நாள் ஞாபகம் வந்ததே..நண்பனே... ஒரு தடவை எம்.ஜி.ஆர்.சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது மதவேறுபாடுகளின்றி யாவரும் பிரார்த்தித்தனர்.அதைக் கண்முன் வாலி கொண்டுவந்தார்.ஒளிவிளக்கு திரைப்படத்தின் மூலம்.இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு.. சுசிலாவின் குரலில் நமது கண்களும் பனிக்க எழுதினார். கொள்கைப் பிடிப்புள்ளவராகவே காணப்பட்டார்.கட்சி அரசியல் இல்லாதவர்.ஆனாலும் தமிழுக்காய் கலைஞருடன் இயைந்தவர். கண்ணதாசனைப் போல இவரும் மனித மனங்களைப் படம் பிடித்துக்காட்டியவர்.ஆசைமுகம் படத்தில் எத்தனை பெரிய மனிதர்க்கு எத்தனை பெரிய மனமிருக்கு......இதயமற்ற மனிதர்களின் குணங்களை வரிகளுக்குள் உள்வாங்கி எழுதி நம்மையும் சிந்திக்கவைக்கிறார்.சிவாஜி,முத்துராமன்,ஜெமினி,ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன்,கமலகாசன்,ரஜனி எனப் பலருக்காவும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதுக்கவிதை வடிவில் அவர் எழுதித் தொடராக வந்து பின் நூலாக வெளி வந்த பாண்டவர் பூமி பலரின் வரவேற்பினைப் பெற்றது எனலாம். அதே போல அந் நாட்களில் பொய்க்கால் குதிரை நூலும் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. சிறுகதை,கவிதையுடன்,வாழ்வியலை,இதிகாசங்களை உரைநடை வடிவிலும் எழுதினார்.கிருஸ்ண விஜயம் உதாரணம். இவரை நேசித்தவர்கள் பலர்.நெல்லை.ஜெயந்தன் ,வாலிப வாலி'நல்லதொரு எடுத்துக்காட்டு.அதே போல் தனது அனுப்வங்களை 'நினைவு நாடாக்கள்' எனும் நூலாகவும் தந்துள்ளார். பழகுவற்கு இனியவர். பிறர் மீதான கருணை அதிகம் கொண்டிருந்தவர்.அதனால் தான் எமது தேசியதலைவரின் தாயார் இறந்த போதும்,சிறுவன் பாலச்சந்திரனை நினைந்தும் கவிதைகள் தந்துள்ளார். மரபுக் கவிதை,புதுக் கவிதை பற்றிய விவாதம் இன்னும் அகலாத பொழுதில் துணிந்து ஆன்மீகக் கட்டரைகயை தொடராக விகடனில் எழுதி நூலாகவும் தந்தார். இவருக்கு உயரிய விருதாக பத்மசிறி விருது 2007 இல் கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.இன்னும்,மாநில அளவிலான விருதுகளை தான் எழுதிய திரைப்பாடல்களுக்காகப் பெற்றும் இருந்தார்.இவரின் பணிகளுக்கு பத்மசிறி விருது போதியதாக இல்லை.எனினும் கவனிக்கப்பட்டிருக்கிறார். ஆறுமுக அந்தாதி,கம்பன் எண்பது,அவதார புருஷன்,நிஜ கோவிந்தம் குறிப்பிடத் தக்கன. அதிகமான நூல் அறிமுகங்கள்,ஒலி நாடக்களின் விழாக்களில் கலந்து பேசுகையில் சிறந்த பேச்சாளாரகவும்,ரசனையாளராகவும் அடையாளப்படுத்தினார். அறிஞர்கள் சபையில் பெரும் பாராட்டைப் பெற்ற நூலாக தமிழ்க்கடவுளும் விளங்குகிறது.ஆன்மீக ஈடுபாடு அவரிடம் நிறையவே இருந்திருக்கிறது.நெற்றியில் துலங்கும் பொட்டே சான்று.அதனால் தானோ ராமனுஜ காவியம் எனும் நூலை எழுதினார்.கிருஸ்ண பக்தன் இன்னொரு உதாரணம். வாழ்வின் அனுபவஙகள் ஒரு மனிதனை எவ்வளவிற்கு ஆற்றுப்படுத்துகிறது. அதனால் தான் கோபம் கொண்டதில்லை.பிறர் மீது வசை பாடியதில்லை என நண்பர்கள் சொல்லிக்கொள்வதுண்டு.நானும்..இந்த நூற்றாண்டும்...நூல் பலருக்குள்ளும் . ஊடுருவி உள்ளததாக செய்திகள் சொல்லியது. வாழும் போதே துன்பப் பட்டவ்ர்.எனினும் வாழும் போதே கௌரவிக்கப்பட்டவர். தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப் பாடல்களின் தொகுப்பாக வாலி 1000 எனும் தொகுப்பாக அவரினெண்பதாவது பிறந்த நாள் பாரிய விழாவில் கமலகாசனும்,ரஜனியும் கலந்து சிறப்பித்ததுடன்,அனைத்துத் தரப்பினரும் கலந்து சிறப்பித்தது வாழும் போதே கௌரவிக்கப்பட்டிருக்கிறார் என்பதே பொருத்தமானது. வானொலி நாடகங்கள்,கவிதைகள் மட்டுமே எழுத் வந்தவர் எமக்கு அடையாளப்படுத்தி திரையில் கவிஞராகவும் நடிகராகவும் தரிசித்திருக்கிறார். 1931இல் பிறந்த வாலி ஈழத்தவர் பால் அதிக ஈடுபாடு காட்டியவர்.ஈழம் பற்றி சிந்தித்தவர்.கிடைக்கின்ற பொழுதெல்லாம் பேசியவர்.எழுதியவர். இன்று நம்மைவிட்டு தூரமாய் சென்றுவிட்டார். ஒவ்வொருவர் வாழ்வின் முடிவும் நமக்கு ஒரு செய்தியைச் சொல்லியே சென்றிருக்கின்றன. வாலியின் வாழ்வும் நம்மை வழி நடத்த்ட்டும். அவரின் படைப்புலகம் ஸ்தம்பித்தன.அவரின் புகழ் உடல் நம்முள் உறுதியாய் நிற்கும். முல்லைஅமுதன் 18/07/2013 நன்றி:ஒரு பேப்பர்

No comments:

Post a Comment