Tuesday 25 June 2013

ஈழத்தை நேசித்த மாமனிதன்:மணிவண்ணன்



 மனித நேயம் மிக்கவர்.
தேசியத் தலைவர் மீது அபிமானம் கொண்டவர்.
ஈழம் அவர் கனவு.
தன் பள்ளி நண்பர் சத்தியராஜுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியவர்.
ரசிக்கத் தெரிந்தவன்.அதனால் தான் கலைஞன் ஆனான்.
31/07/1954இல் பிறந்தவர்.
வாசிப்பதில் நிறைய ஆர்வம் கொண்டவர்.ஈழம் பற்ரிய நூல்களை விரும்பிப் படிப்பார் என்பது நண்பர்களின் செய்தி.அண்மையில் நோர்வேயில் பேசிய போது உணர்வுடன் இருந்ததை நம்மால் உணர முடிந்தது.
அண்மைக் காலமாக நாம் தமிழர் கட்சிக் கூட்டங்களில் தன் நிலைப்பாட்டை உறுதியுடன் சொல்லி வந்தவர்.
பாரதிராஜாவின் உதவி இயக்குனராக தன் திரையுலக வாழ்வை ஆரம்பித்த மணிவண்ணன் 'நூறாவது நாள்' திரைப்படத்தை
இயக்கி நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்தியவர்.காதல்,அரசியல், இவற்றை இணைத்த கதைகளை திரைக்கதையாக்குவதில் அதிக ஈடுபாடு காட்டியவர்.
ஈழம் பற்றிய கதையை ஈழத்திலேயே படமாக்கத் திட்டமிட்டிருந்தவர்.யுத்தம் முடிவில் மாற்றம் ஏற்பட்டபின் சூழல் மாற்றமடைய அது நிறைவேறாமலேயே போயிற்று.
நகைச்சுவையாகப் பேசினாலும் நடிப்பில் தந்தையாக,நண்பனாக,அரசியல்வாதியாக பல குணசித்திரப் பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
யுத்த அவலங்களை கிராமங்களுக்குள் கொண்டு செல்வதில் பலருடன் சேர்ந்து பணியாற்றியவர்.
பல நடிகர்களுடன் எந்தவிதப் பாகுபாடின்றி பழகியதாக பலமுறை நண்பர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.
ஈழத்து நூல்களைக் கண்டதும் அவருக்கு முதலில் ஞாபகம் வருவது லண்டனில் வாழும்
திரு.பத்மநாப ஐயராவார்.யார் மூலமாகவேனும் நூல்களை மணிவண்ணனிடம் சேர்க்கையில் சுகம் விசாரிப்பதாக திரு.பத்மநாப ஐயர் ஒருமுறை சொல்லியிருந்தார்.மணிவண்ணனின் வாசிப்பு ஆர்வம் பற்றி உணரமுடிந்தது.
எவனொருவன் நல்ல நூலகளை வாசிக்கின்றானோ அவனின் மனம் தெளிவு பெறுகிறது.
மணிவண்னன் மூலம் நான் அறிந்து கொண்டேன்.
யாவராலும் பேசப்பட்ட ஜோடி மணிவண்ணன்,சத்தியராஜ் இருவரும் தான்.
அமைதிப்படை ஒன்றிலும் இணைந்து செயல்பட்டு வெற்றிக்கனியைப் பறித்தவர்கள்.
சில காலம் நோய் வாய்ப்பட்டிருந்தாலும் பின்னர் சத்தியராஜ் அவர்களுடன் 'நாகராஜன் எம்..எம்.எல்.'திரைப்படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார்.
மிகவும் நேர்த்தியாக கதையை வடிவமைக்கும் அவரின் புதிய திரைப்படம் பல செய்திகளை சொல்லும் என்றே நம்புகிறோம்.முள்ளிவாய்க்கால் சோகங்களுக்குப் பிறகு அவரின் முயற்சி சில திருப்பங்களையும் ஏற்படுத்தலாம்.
வெற்றிப்பட இயக்குனரல்லவா அவர்.உடல் தளவுற்றிருந்தாலும் மனம் தளராதவர்.
ஈழம் பற்றி/தேசியத் தலைவர் பற்றி இவ்வளவு துணிச்சலாக பேசிய கலைஞர்கள்  அபூர்வம்.மணிவண்ணன் மேலானவர்.எப்போதும் தன்னை தனித்தே அடையாலப்படுத்தி நின்றார்.
பாரதிராஜாவின் உதவியாளராக இருந்த பெருமை கொண்டவர் எனினும் இவரின் படைப்புக்கள் அனைத்தும் மாறுபட்டே இருந்தன.
அவரை எப்படி காலன் தொட்டான்.
உலகில் யாரும்  எதிர்பார்த்திராத கனவைச் சொல்லி அதிரவைத்தவர்.என் உயரற்ர உடலின் மீது புலிக்கொடியை போர்த்தும் படி கேட்டுக்கொண்டதும்,தன் உடலை சீமானிடம் ஒப்படைக்கும் படியும் ...தன்னம்பிக்கை.தமிழர் மீதான பிரியம்.ஈழம் அமையும் என்பதில் தீவிர ஈடுபாடும் காட்டியவர்.உடல் சுகவீனமான நிலையிலும் கைதிகள் விடுதை,ஈழ விடுதலை பற்றி சூறாவளிப் பிரச்சாரம் மேற் கொண்டவர்.இழக்கச் சம்மதம் வருமோ?
மாரடைப்பு அவருக்கு வந்திருக்கக் கூடாது.ஒவ்வொரு மதிப்புக்குரியவர்களின்  இழப்பு வரும் போதும் கண்ணீர் வடியும்.
எனி,மணிவண்ணன் அவர்களின் திரைப்படங்களில் அவர் தோன்றும் போது நகைச்சுவை கூட சிரிப்பைத் தராது.மாறாக, நெஞ்சக்குழிக்குள் வலியைத் தரவே செய்யும்.
நூல்களுக்கிடையே வாழ்ந்தும்,மறையும் போதும் நூல்களுடனே இருந்த்திருக்கிறார் என்பது அதிசயம் தான்.
தோழமை என்றொரு சொல்லுக்கு வலிமை அதிகம்.அது தான் எம்மையும் உலுக்கி எடுக்கிறது.
பாடையில் படுத்தூரைச் சுற்றும் போதும் தமிழ் மனந்து சாக வேண்டும் என்றான் ஒரு கவிஞன்.இங்கு ஈழம் மனதில் சுமந்தான் என்றெ சொல்ல வேண்டும்.இவன் புகழ் ஓயாது.
இன்னொரு மணிவண்னனை நாம் காண முடியாது.
கதையின் விதை தூங்குகிறது
ஈழம் அவருக்கு/அவர் குடும்பதிற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
அவரின் புகழுடல் நம்முடனே வாழும்.
போய் வருக நண்பனே...
முல்லைஅமுதன்

15/06/13

No comments:

Post a Comment