
சிவம் பரமலிங்கம் அவர்களும் அவரது மகள் நிலா பரமலிங்கம் அவர்களும் எழுதிய 'எந்தையும் யானும்' என்ற நூலும் நிலா எழுதிய 'எழுத எழுத' என்ற நூலும் கடந்த 05.11.2006 அன்று இலண்டனில் உள்ள வெம்பியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அரியாலையூர் அம்புயம், நிலா ஆகிய பெயர்களில் எழுதிவரும் இவரின் எழுத்தாழுமையையும், வானெலியில் குரல் இனிமையையும் அறிந்த பலருக்கு இவரை சக்கர நாற்காலியில் சந்திக்கும் போது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவரது சாதனைகளைக் கண்டு அதிசயித்துப் போவார்கள். 'நிலாமுற்றம்' என்ற கணனிவலை சஞ்சிகையினையும் திறம்பட நடாத்தி வருகின்றார்;. இவரது தன்னம்பிக்கையும், மனவலிமையும், விடாமுயற்சியும், தமிழ்ப்பற்றும் மிகவும் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.
நிலா போன்றவர்கள் சோம்பேறிகளாகவும் மனம் ஊனமுற்றவர்கள் ஆகவும் வாழுபவர்களுக்கு ஒர் எடுத்துக்காட்டாகவும் பாடமாகவும்,திகழுகின்றனர் என்று கூறினால் மிகையாகாது.
நூல் வெளியீட்டு விழா மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டத்துடன் மிகவும் நேர்த்தியாக காணப்பட்டது. குத்து விளக்கினை வானொலிக் கலைஞர் திரு. நடாமோகன் தம்பதியினர் ஏற்றிவைத்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தினை செல்வன் சி.யனகன், செல்வ சி.மதுஷh பாடினார்கள். தலைமையுரையினை செல்வி.செல்வமணி வடிவேல் அவர்களும், வரவேற்புரையினை திரு. பரமலிங்கம் சிவகுமார் அவர்களும் வழங்கினர். ஆறிவிப்பாளராக திருமதி நவாயோதி யோகரட்னம் அவர்கள் கடமையாற்றினார்.
ஆசியுரையினை இளவாலை அமுது அவர்களும், வாழ்த்துரையினை திரு. நடாமோகன் அவர்களும் வழங்கினர். திருமதி மாதவி சிவலீலன் அவர்கள் நூல் வெளியீட்டுரைனை நிகழ்த்தினார்கள். ஆய்வுரையினை கவிஞர் க. இராஜமனோகரன், திரு மு.து.செல்வராஜா திரு.சூ.யோ. பற்றிமாகரன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.முதற்பிரதியினை ஆனந்தராணி பாலேந்திரா தம்பதியினர், மோகனதாஸ் தம்பதியினர் திருமதி. பரமலிங்கம் அவர்களிடம் பெற்றுக்கொண்டனர். சிறப்புப்பிரதியினை திரு. த. தர்மசீலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நிலா அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். நிலா அவர்களுக்கு அமுதுப் புலவர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். நாட்டிய ஆசிரியை திருமதி ஜெயந்தி யோகராஜாவின் மாணவிகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. கௌத்துவ நடனத்தினை செல்வி சி. மதுஷh ஆடினார். வுpழா முடிவில் இராப்போசனமும் வழங்கப்பட்டது.
விழாமுடிந்ததும் ஊரில் தமிழீழத்திற்குச் சென்று வந்தது போன்றதொரு மனநிறைவு ஏற்பட்டது.
ராகவன் (ஈழம்)
No comments:
Post a Comment