- முல்லை அமுதன் -

ஒரு ஆளுமைமிக்க கலைஞனாக கவிஞனாக, வீரிய வார்த்தைகளை வீசியெறிந்து எழுத்தாக்கும் வல்லமையும் கொண்டவர்தான் திருநெல்வேலி யாழ்ப்பாணத்தில் 03.03.1955 ல் பிறந்த கணபதி கணேசன் ஆவார். எனது ‘நித்யகல்யாணி’ நூல் பதித்தலுக்காக சிரித்திரனின் கவின் அச்சகத்தில் அச்சாகிக் கொண்டிருந்தபோது தான் ராதையன் மூலம் கணபதி கணேசனின் தொடர்புகிட்டியது. அன்புநெஞ்சன், சுதாராஜ், காவலூர் ஜெகநாதன், வடகோவை வரதராஜன், சௌமினி போன்றோர் எழுதத்தொடங்கிய காலங்கள்… நெருங்கிவந்தோம். 1970 ல் தன் எழுத்துப் பணியை ஆரம்பித்த கணபதி கணேசன் ‘மதுரா’ என்ற புனைபெயாரிலும் எழுதியுள்ளார். ஈழநாடு, தினகரன், சிரித்திரன்,செவ்வந்தி, வீரகேசரி ஆகியவற்றிலும் எழுதியுள்ளார். தமிழகத்தில் மக்கள் பாதை மலர்கிறது, பொங்கும் தமிழமுது, ஆகியவற்றிலும் எழுதியுள்ள இவர் மலேசிய நண்பன், மக்களோசை, இதயம் ஆகியவற்றிலும் தொடர்புகளை பேணிவந்துள்ளார் என்றும் அறியமுடிகிறது.
மேகம் எனும் சிறுசஞ்சிகையினை ஓட்டுமடத்திலுள்ள தனது கௌரி அச்சகத்தில் அச்சிட்டு வந்ததைக் காண்பித்தான். அதில்
சிறுசஞ்சிகைக்கே உரிய இறுக்கமும் ஆழமும் தெரிந்தது. அப்போது தமிழகத்தில் வெளிவந்த புதியகலாச்சாரம் சஞ்சிகையை
ஞாபகப்படுத்தியது. கொக்குவில் இராமகிருஷ்ணமிஷனில் ஆசிரியையாகக் கடமையாற்றிக் கொண்டிருந்த ‘கவிதாயினி’ கௌரி
திருநாவுக்கரசு அவர்களைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
பின்பொருநாளின் மாலைப்பொழுதில் மேகம் அனுசரனையுடன் எனது ‘ஷோபா கிரியேஷன்ஸ்’ சார்பில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்
‘மை பெயா லேடி’ நிகழ்ச்சியினை நடாத்தினோம். அவரின் அச்சகத்தில் நிறையப்பேசினோம்….விவாதித்தோம் …. அவரின் மூலமாகத்தான்
திரு பத்மநாபஐயர் அவர்களை அவர் தங்கியிருந்த சங்கிலியன் வீதியில் சந்தித்ததும் அவரிடம் இருந்து புதிய ஜனநாயகம்,
புதியகலாச்சாரம் போன்ற தீவிர இலக்கிய சஞ்சிகைகளைப் பார்க்கக் கிடைத்தது.
அப்போதே கணபதி கணேசனின் தீவிர இலக்கிய சிந்தனைபற்றி அறியமுடிந்தது. நாமிருவரும் சேர்ந்து ‘புதிய அடிமைகள்’ எனும் கவிதை நூலை மேகம் வெளியீடாக 1983; ல் வெளியிட்டோம். மகேந்திரன் எனும் அப்போதைய மாணவர் ஒருவரால் அட்டைப்படம்

கீறப்பட்டிருந்தது. அப்போதுதான் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடந்தது. அதனால் நாம் திட்டமிட்டபடி நூலை வெளியிடமுடியாது
போயிற்று. மானுட விடுதலை வேண்டும் என நினைத்தே அட்டைப்படத்தை ஓவியர் வரைந்திருந்தார். மாறாக சிறையுடைப்பு எமக்கு இராணுவ அச்சுறுத்தல் தரும் என்பதால் 800 பிரதிகளை கௌரி அச்சகத்தின் முன்பு எரித்தோம்.
1984ல் நானும் நாட்டை விட்டு வெளியேறும்படியாயிற்று. அவனும் நிறைய எழுத்தில் சாதிக்க உழைத்தான். பண்டைய
தமிழ்ப்புதையல்களில் இருந்து தேர்ந்தெடுத்த படைப்புகளை தொகுத்து ‘தமிழ் அமுதம்’ எனும் நூலையும் வெளியிட திட்டமிட்டிருந்தோம்.
மலையகம், தமிழகம் என அவனும் புலம்பெயர்ந்தான். தமிழீழ மாணவர்பேரவை சென்னை-5 வெளியிட்ட ‘பொங்கும் தமிழ் அமுது’ சஞ்சிகையில் தன்னையும் இணைத்து நிறைய எழுதினான். 1985 ல் ‘சூரியனைத் தொலைத்தவர்கள்’ கவிதை நூலை வெளியிட்டார்.
பின்னர் மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்தார். இவருக்கு யதுந்தன் எனும் மகனும், மதுரா எனும் மகளும் உள்ளனர். மலேசியாவிலும்
நண்பர்களுடன் இணைந்து செம்பருத்தி மாத இதழை வெளிகொணர்ந்தார். அவரின் நல்ல சிந்தனைகளுக்கு களம் செம்பருத்தி இதழின் மூலம் கிடைத்தது. தமிழர் நலன்களில் அதிக அக்கறை கொண்டிருந்தார். தமிழர்களை ஒருங்கிணைப்பதில் முன்னின்று உழைத்தார். 2002 ல் உலகத்தமிழர் நிவாரண நிதிக்காக ‘குருதி பூர்த்த வெள்ளரசு’ என்ற கவிதை நூலை வெளியிட்டார். இடைக் காலத்தில் ‘மூன்றாம் பிறையும் பௌர்ணமி நிலவும்’ என்ற கவிதை நூலை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நல்ல சிந்தனையாளர்களை காலன் விட்டுவிடுவதில்லை.
‘எதுவும் வேண்டாம்
‘ஒன்று’
அதுமட்டும்தான்
வேண்டும்! அது….
விடுதலை!
கனவுகள் வசப்படாத ஒரு பொழுதில் நோய் வந்தது. தமிழகத்தில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு 13.11.2002ல் மரணம் அவனைத்
தழுவியது. நிறையப் பேசுபவன். நிறையவே சிந்திப்பவன். அவன் இறக்கும் போது மகன் யதுந்தனுக்கு 16 வயது. மகள் மதுராவிற்கு 18
வயது. இவரின் விருப்பத்திற்கேற்ப இவரது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அறிவுமதி, வல்லிக்கண்ணன், சுபவீரபாண்டியன், தாசீசியஸ், ஆகியோருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தவரின் கனவு மெய்ப்பட வேண்டும்.
mullaiamuthan_03@hotmail.co.uk
எழுத்தாளர் சிவலிங்கம் சிவபாலன்!
-முல்லைஅமுதன் -

ஈழத்து இலக்கிய உலகம் இன்னும் ஒரு படைப்பாளியை 23.05.2008 ல் இழந்துள்ளது. இலக்கியச் செழுமை மிக்க யாழ்ப்பாணத்திலுள்ள
நாயன்மார்கட்டு கிராமத்தில 1954ல்; பிறந்த இவர் வீரம் விழைந்த உரும்பிராய் மண்ணில் ஊன்றிக் கால் பதித்தவர். பின்னாளில் 1985 தொடக்கம் பிரான்ஸிற்கு புலம்பெயர்ந்தார். எவருடனும் பழகுவதற்கு இனிமையானவர். எவரையூம் எளிதில் நண்பராக்கிக் கொண்டுவிடுவார். தமிழ் மக்களுக்கான விடியல் விரைவில் வரவேண்டும் என விரும்பும் பலரில் இவரும் ஒருவர். வி. ரி.
இளங்கோவன்.. தியாகி சிவகுமாரன் பற்றி நிறையவே அறிந்து வைத்திருந்தார்.
ஊரில் இருந்த காலத்திலேயே தேன்மலர் எனும் சஞ்சிகையை நடத்தியுள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை என தன் எழுத்தை
விரிவுபடுத்தினார். ஈழமுரசு, எரிமலை, உயிர்நிழல், போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் எழுதி வந்துள்ளார். 1998 ல் ‘சுரங்கள் மாறி……’
எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். பலரையூம் நேசித்தார். எழுத்தாளர் கலாநிதி சொக்கன் அவர்கள் மீது மிகுந்த
மாpயாதை வைத்திருந்தார். அவரின் மாணவன் என்று சொல்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். அதனால் தான் காற்றுவெளி நுர்லகம்
வெளியிடும் இலக்கியப்பூக்கள் எனும் தொகுதிக்கு கலாநிதி சொக்கன் அவர்களைப்பற்றிய கட்டுரையை எழுதித் தந்துள்ளார்.
நிறைய வாசிக்கும் பழக்கம் உள்ள இவர் இங்கிலாந்திற்கு வந்தபின்பு ஒரு இலக்கிய வெறுமையை உணர்ந்தவராகக் காணப்பட்டார்.
அதனால் தானோ என்னவோ காற்றுவெளி நுர்லகத்தை தன் வாசிப்புக்காகப் பயன்படுத்த தொடர்பு கொண்டார். சிலநாட்களிலேயே
இதயஅறுவைச்சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். பின்னரும் இலக்கிய ஆர்வலர்களுடன் அதிகமாகவே தொடர்புகளை அதிகமாகவே
பேணிவந்தார். இலக்கியம் பற்றி பேசுவதற்கான தன் ஆதங்கங்களை, ஆர்வத்தை எழுத்தாளர்களுடன் பேசும் போது வெளிப்படுத்தினார்.
அவாpன் வார்த்தைகளில் மெல்லியதான சோகம் இழையோடியதையூம் எம்மால் உணர முடிந்தது. சிறுவயதின் நாடக முயற்சிகளை மீட்டுப்பார்த்து இப்பொழுது அது முடியாத ஏக்கம் எமக்குப் போலவே அவருக்கும் இருந்துள்ளது. தன் படைப்புகள் முழுவதையூம் தொகுத்து ஒரு நுர்லாகவூம் தனித்து ஒரு நாவலும் எழுதத் திட்டமிட்டிருந்தார் அவரின் ஆசைகள் நிறைவேற நாமும்
பிரார்த்திப்போமாக…
23.05.2008
புலம்பெயர்ந்த பறவை ஒன்றின் நீள்மௌனம!
- முல்லைஅமுதன் -

இடியாய் வந்து விழுந்தது. காறு;றும் வீச மறந்திருக்கலாம். மழையும், குளிரும் நம்மை அயர வைத்திருக்கலாம். எனி நம்மை ஆசுவாசப்படுத்திக் கொன்டிருந்த ஒரு பொழுதில் இன்னொரு அதிர்ச்;சியும் எம்மை அதிர வைத்தது. அது தான் மனநல வைத்தியர் க. இந்திரகுமார் அவாகளின் மரண செய்தி. (21-12-2008) காலைக்கதிர் ஆசிரியரிடம் இருந்து கிடைத்தது.
யாழ்ப்பாணம் கதிரவேலு-சிவபாக்கியம் தம்பதிகளுக்கு மகனாக 1945ல் பிறந்த இவர் மனநல வைத்தியராகவும், அறிவியல் நூல்களுடன் பிற நல்லறிஞர்களின் நூல்களை வெளியிடும் பதிப்பாளராகவும் மிளிர்ந்தார். இவர் பிரதம ஆசிரியராக இருந்து மேகம் மாத இதழை தொடந்து ஓராண்டுக்கு மேல்லாக தொடர்ந்து நடாத்தி வந்தார்.
இலங்கையில் இருந்த காலத்தில் அறிவியல், மருத்துவ கட்டுரைகளை அனைத்துப்பத்திரிகைகளிலும் எழுதி வந்திருந்தார். இவர் எழுதிய மண்ணில் இருந்து விண்ணுக்கு எனும் நூலுக்கு 1973 ல் இலங்கையரசின் சாகித்தியமண்டலப்பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. செங்கையாழியான் எழுதிய வாடைக்காற்று நாவல் திரைப்படமானபோது கே. எம் வாசகரின் இயக்கத்தில் அமரர் இந்திரகுமார் கதாநாயகனாக நடித்ததுடன் இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியுமுள்ளாh. இவர் எழுதிய ‘விண்வெளியில் வீரகாவியங்கள்’ எனும் நூலுக்கு தமிழக அரசின் பரிசு (1996) கிடைத்தது.
இவர் நடனக்கலைஞர் விஐயாம்பிகை அவர்களை வாழ்கைத்துணைவியாக்கிக் கொண்டார். இவர்களுக்கு விநோதினி என்ற மகளும் உண்டு. ஈழத்துத் தமிழர் வரலற்றை நூலாக எழுதி வெளியிட இருந்தவரின் கனவு நனவாகவில்லை என்பது கவலைக்குரியது. சிலகாலம் விடுதலை, காலைக்கதிர் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவிலும் இருந்துள்ளார். இலங்கையில் விண்வெளிக்கழத்தின் ஸ்தாகராக இருந்த இவர் உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி எழுத்தாளர் அமரர் ஆதர் சி. கிளார்க்கின் நண்பருமாவார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும், அக்கட்சியின் அமரர் பீற்றர்கெனமன் அவர்களுக்கு தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றிமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
பல்கலைவிற்பன்னரான இவரின் மரணம் இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பாகும்.
இவர் எழுதிய நூல்கள்
1. FIRE WALKING THE BURNING FACTS (ENGLISH)
2. மண்ணில் இருந்து விண்ணுக்கு
3. புதுயுகம் கண்டேன்
4. விண்வெளியில் வீரகாவியங்கள்
5. டயானா – வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா?
6. வயாக்ராவும் ஏனைய சிகிசிசை முறைகளும்.
7. புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் அறைகூவல்
இவர் பதிப்பித்த நூல்கள்
1. இலங்கேஸ்வரன் (நாடகம்) – ஆர். எஸ். மனோகர்
2. யாழ்ப்பாணத்தின் வீரத்தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலி (நாடகம்) – கௌதம நீலாம்பரன்
3. திருக்கோணேஸ்வரம் தான் தெட்சணகயிலாயம் (தொல்லியல்) – பண்டிதர் வடிவேலு
4. The Marathan Crusade for ‘FIFTY. FIFTY’ (SPEECH) G.G.PONNAMBALAM
mullaiamuthan_03@hotmail.co.uk
மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம்!
கவிஞர் தா. இராமலிங்கம் மறைவு! - முல்லை அமுதன் -

சாவகச்சேரியிலுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் 16.08.1933இல் அமரர் தாமோதரம்பிள்ளை, அமரர் சின்னப்பிள்ளை ஆகியோருக்கு
மகனாகப் பிறந்த கவிஞர் தா. இராமலிங்கம் அவர்களின் கவி ஆளுமை எம்மை எல்லாம் விழிப்புற செய்தது. சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் படித்த கவிஞர் தன் பட்டப் படிப்பை கல்கத்தா, சென்னைப் பல்கலைக்கழகங்களில் முடித்துள்ளார். இலங்கையில் இரத்தினபுரி சென் லூக்ஸ் கல்லூரியிலும் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்திலும் தன் ஆசிரியத் தொழிலைத் தொடர்ந்தார். பின்னர் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் அதிபராகப் பதவி உயர்வு பெற்றார். இவர் மீசாலையைச் சேர்ந்த மகேஸ்வரியைத் தன் வாழ்க்கை துணைவியாக்கிக் கொண்டார். இவர்களுக்கு அமரர் கலைச்செல்வன், வைத்தியகலாநிதி அருட்செல்வன், பொறியியலாளர் தமிழ்ச்செல்வன், திருமதி இசைச்செல்வி குகரூபன் (டீ.யு), வைத்தியகலாநிதி கதிர்ச்செல்வன் ஆகியோர் மக்கட் செல்வங்களாகப் பெற்றுக்கொண்டனர்
இவரின் கவிதைகள் எளிமையானவை. இவரின் கவிதையின் தெளிவைச் சிறப்புற நமது வாசிப்புக்கு புதுமெய்க் கவிதைகள் (1964), காணிக்கை (1965) நூல்கள்மூலம் கிடைக்கிறது. 1960இல் இருந்து கவிதைகள் எழுத தொடங்கிய கவிஞர் அலை, சுவர், புதுசு, சமர் போன்ற சிற்றிதழ்களில் எழுதிய கவிதைகளில் சில அ. யேசுராசா, இ. பத்மநாப ஐயர், உ. சேரன், மயிலங்கூடலூர் பி. நடராசன் ஆகியோர் தொகுத்த மரணத்துள் வாழ்வோம் (1985ஃ 1996) தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
எம். ஏ. நுஃமான், அ. யேசுராசா ஆகியோர் தொகுத்த பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (1984ஃ 2003) தொகுதியில் இறுக்கமான, சிறப்பான 5 கவிதைகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பத்மநாப ஜயரும் யேசுராசாவும் இனைந்து 1981இல் தா. இராமலிங்கம் கவிதைகளை, கவிஞர் மீராவின் அன்னம் வெளியீடாக வெளியிட முனைந்தும் முடியாதுபோனமை துரதிர்ஷ்டமே. மீண்டும் இரண்டு மூன்று ஆண்டுகள்
முன்னர் முயற்சிசெய்தபோதும் காலச்சூ+ழல் காரணமாக முடியாதுபோயிற்று. கவிஞரும் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டு தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார்.
நீண்டநாட்களாகவே இருந்துவிட்ட கவிஞர்பற்றி நண்பர் யேசுராசாவிடமும் ராதேயனிடமும் கேட்டிருந்தும் அப்போது பதில் கிடைக்கவில்லை. கவிஞரின் ஆழ்ந்த மௌனம் எமக்கு அதிர்ச்சியைத் தந்ததில் வியப்பில்லை.
பாடசாலை அதிபராக இருந்த இவரின் சமூக நோக்கு, ஆழ்ந்த புலமை, மனித நேயம் இவற்றிக்கும் மேலாக தமிழ்த் தேசியம் மேலான அதித அக்கறை இவரின் கவிதைகளில் தெரிந்தாலும் நிறைய இன்னும் எழுதியிருக்கலாமோ என்ற ஏக்கம் எம்மிடம் உண்டு. தனக்கான கவிவாரிசை உருவாக்கியிருக்கலாம்தான்.
‘ஞாபகமறதி’ நோயினால் தன்னைமறந்தநிலையில் வாழ்திருக்கிறார் என்பதை அவரது மகன் மூலம் அறிந்தபோது வேதனையாக இருந்தது. இன்றைய இளைய கவி ஆர்வலர்கள் கவிஞரின் கவிதைகளை தேடிப் படித்தல் வேண்டும்.
25.08.2008இல் அமரத்துவமடைந்த கவிஞரின் உடலம் கிளிநொச்சி (தமிழ் ஈழம்) மண்ணில் 26.08.2008 தகுந்த மரியாதையுடன் தகனம்
செய்யப்பட்டுள்ளது. மரணம் நிஜம் எனினும் வாழ்தலுக்கான உறுதிப்பாடு இல்லாத சூழலில் அவரின் மரணம் பல செய்திகளைச் சொல்லிச்செல்கிறது. அவர் எழுதிய முழுக் கவிதைகளையும் தொகுத்து வெளியிடுவதுதான் இலக்கிய உலகம் அவருக்குச் செய்யும் சமர்ப்பணமாகும்.
No comments:
Post a Comment